×

அரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16பவுன் நகை கொள்ளை

அரூர், செப்.25:அரூர் அடுத்த கோட்டப்பட்டியை சேர்ந்த 61வயது ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருக்கும், இவரது 53வயது மனைவிக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 12ம் தேதி சிகிச்சை முடிந்து, கிருஷ்ணகிரியில் உள்ள மகன் வீட்டில் தங்கிருந்தனர். நேற்று முன்தினம் மாலை, இருவரும் கோட்டப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 16.5 பவுன் நகை, ₹1.20 லட்சம் ரொக்கம் மற்றும் பூஜை அறையில் இருந்த, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், அரூர் டிஎஸ்பி தமிழ்மணி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தர்மபுரியில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : house ,jewelery ,Arur ,
× RELATED வேப்பந்தட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, பணம் திருட்டு