குடியாத்தத்தில் சுற்றித்திரிந்த சிறுவன், 2 தங்கைகள் மீட்ப: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்

வேலூர், செப்.25: குடியாத்தத்தில் சுற்றித்திரிந்த கர்நாடக மாநிலம் கேஜிஎப்பை சேர்ந்த சிறுவன், அவரது 2 தங்கைகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிறுவன், 2 சிறுமிகள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் பசியுடன் இருந்தது தெரியவந்தது.

பின்னர், அவர்களுக்கு உணவளித்து விசாரணை செய்ததில், கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் சமுத்திரம்(13), மகள்கள் காவியா(10), அலமேலு(6) என தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு தமிழ் தெரியாததால் மேற்கொண்டு விவரங்கள் அறிய முடியவில்லை. இதையடுத்து டவுன் போலீசார் வழக்குப்பதிந்து 3 சிறுவர்களையும் வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றன

Related Stories:

>