×

திருச்செந்தூரில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை

திருச்செந்தூர்,  செப். 25:  திருச்செந்தூரில்  கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கிவைத்தார்.
 தமிழக முதல்வரால்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான 2   கூடுதல் ஆம்புலன்ஸ் வாகன சேவை துவக்கவிழா திருச்செந்தூரில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை  வகித்தார். எஸ்பி ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வைகுண்டம்  சண்முகநாதன், விளாத்திகுளம் சின்னப்பன், ராதாபுரம் இன்பதுரை முன்னிலை  வகித்தனர். இதனிடையே விழாவையொட்டி தமிழக முதல்வரால்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தலா ரூ.18 லட்சம் மதிப்பிலான 2   கூடுதல் ஆம்புலன்ஸ் வாகன சேவையை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து துவக்கிவைத்து அதன் சாவிகளை டிரைவரிடம் வழங்கினார்.

 விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர்  மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், திருச்செந்தூர்  ஆர்டிஓ தனப்ரியா, தாசில்தார் ஞானராஜ், பிடிஓக்கள் சந்தோஷ்,  ராமராஜ், ஒன்றியக் குழு தலைவர்கள் திருச்செந்தூர் செல்வி வடமலைப்பாண்டியன்,  கோவில்பட்டி கஸ்தூரி சுப்புராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரெஜிபர்ட்  பர்னாந்து, நகர் வங்கி தலைவர் கோட்டை மணிகண்டன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சுனில், மாவட்ட மேலாளர் ரஞ்சித் விஸ்வநாதன், ஆறுமுக நயினார், ராமச்சந்திரன், லட்சுமணன், சுரேஷ்பாபு, மகேந்திரன்,  பட்டணம் கணேசன், நடுவூர் செல்வன், ஜிந்தாசுந்தர், திருப்பதி, பூந்தோட்டம்  மனோகரன், மகாலிங்கம், லட்சுமணன், மோகன், இன்பச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Thiruchendur ,
× RELATED 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்