×

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக தூத்துக்குடியில் ரூ.2.30 லட்சம் மோசடி

தூத்துக்குடி, செப். 25:  வெளிநாட்டில் வேலை வாங்கித்  தருவதாக தூத்துக்குடியில் ரூ.2.30 லட்சம் மோசடி செய்ததாக  தம்பதி மீது வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர்  கார்த்திக் (34). இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கால்டுவெல் காலனியை சேர்ந்த  பாலசந்திரனும் (35), அவரது மனைவி  விஜயாவும் (33) ரூ.2.30 லட்சம்  வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும்  அவர்கள் உறுதியளித்ததுபோல கார்த்திக்கிற்கு வேலை வாங்கித் தராமல்  ஏமாற்றியுள்னர்.
இதனிடையே  பாலச்சந்திரன் ஏமன்  நாட்டிற்கு வேலைக்குச்  சென்றுவிட்டார். இதையடுத்து வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை மோசடி  செய்ததாக  பாலசந்திரன் மற்றும் அவரது மனைவி மீது தென்பாகம் காவல்  நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் தம்பதியர் மீது தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED முதல்வர் தூத்துக்குடி சுற்றுப்பயணம் ரத்து