×

கொட்டங்காடு கோயில் திருவிழாவில் பச்சை சாத்தி அம்மன் பவனி

உடன்குடி, செப். 25:  கொட்டங்காடு தேவி பத்திரகாளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் பச்சை சாத்தி அம்மன் பவனி நடந்தது.
 உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளியம்மன் கோயில் புரட்டாசி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. 8ம் திருநாளையொட்டி மாலை அம்மன், விநாயகர் மற்றும் பரிவார  மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 9மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் பச்சைசாத்தி பவனி நடந்தது. இதில் ஊர் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் சுந்தரஈசன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Green Saathi Amman Bhavani ,Kotangadu Temple Festival ,