×

திட்டக்குடி அருகே பரிதாபம் கார்கள் நேருக்கு நேர் மோதல் புதுவையை சேர்ந்த இருவர் பலி 4 பேர் படுகாயம்

திட்டக்குடி, செப். 25:    திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.  கடலூர் மாவட்டம் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து புதுச்சேரி  நோக்கி ஒரு காரில் 5 பேர் பயணம் செய்தனர். சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் வந்தது. ராமநத்தம் அடுத்துள்ள காந்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திருச்சி நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கட்டைகள் மீது ஏறி எதிரே புதுச்சேரி நோக்கி சென்ற காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.  

 காரில் இருந்த புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முத்துக்குமார்(30), பாண்டிச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த ராசா மகன் ரகு (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களுடன் பயணம் செய்த தினேஷ், பிரான்சிஸ், பிரபு ஆகிய 3 பேர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரும் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறந்த இருவரின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : persons ,head-on collision ,Tittakkudi ,
× RELATED நேருக்கு நேர் கார்கள் மோதல்