பிரிண்டிங் கழிவுகளை ஏற்றி சென்ற செப்டிங் டேங்க் லாரி பறிமுதல்

திருப்பூர், செப். 25: திருப்பூரில், பிரிண்டிங் கழிவுகளை ஏற்றி சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.திருப்பூரில் மாசு கட்டுபாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் சரவணகுமார், உதவி பொறியாளர் பாரதிராஜா, சுற்றுச்சூழல் பொறியாளர் முரளி ஆகியோர் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூலிபாளையம் நால் ரோட்டில் சென்று கொண்டிருந்த செப்டிங் டேங்க் லாரியை விரட்டி சென்று பிடித்தனர். அதிகாரிகளை பார்த்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். செப்டிங் டேங்க் லாரியை சோதனை செய்ததில் லாரியில் பிரிண்டிங் கழிவுகள் நிரப்பப்பட்டிருந்தது. பின்னர் லாரியை கைபற்றிய அதிகாரிகள் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிரிண்டிங் கழிவுகளை வெளியேற்றி சுத்திகரிப்புக்கு அனுப்பினர்.  மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் லாரியை பறிமுதல் செய்ய கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவின் பேரில் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்தனர்.

Related Stories: