×

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி திராவிடத் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப் 25: வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி திராவிடத் தமிழர் கட்சியினர் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடத் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முனியாண்டி, செயலாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிதிச்செயலாளர் தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : Dravidian Tamil ,withdrawal ,party protests ,
× RELATED டார்ஜிலிங் தனி மாநில கோரிக்கை...