×

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

திருப்பூர், செப். 25:  கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு தனித்தேர்வு வருகிற 29ம் தேதி நடக்கிறது. பள்ளியில் படிக்காமல் நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதும் தனி தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த தனி தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி குறிப்பிட்டு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தனிப்பட்ட முறையில் ஹால்டிக்கெட் அனுப்பப்படாது என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Tags :
× RELATED தாமரை குளம் பகுதியில் குப்பை கொட்டிய லாரி சிறைபிடிப்பு