×

பரிசோதனைக்கு பின்னரே விதைகளை விற்பனை செய்ய வேண்டும்

ஊட்டி, செப்.25: நீலகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் ஊட்டி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது. ேகாவை விதை ஆய்வு துணை இயக்குநர் வெங்கடாசலம் தலைமை வகித்து பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்கள் விதை விற்பனை நிலையத்தில் இருப்பில் உள்ள அனைத்து விதைகளின் ரகங்கள், விலை, இருப்பு போன்ற தகவல்களை தினந்தோறும் பலகையில் எழுதி அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும். இருப்பு பதிவேடு 3 ஆண்டுக்கு ஆய்விற்கு உட்பட்டது. விதை விற்பனை செய்யும் போது கட்டாயம் விற்பனை பட்டியல் வழங்க வேண்டும். விற்பனை பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண், விற்பனை நிலைய முகவரி, பட்டியல் எண், தேதி, விதை வாங்குபவரின் பெயர், முழு முகவரி உள்ளிட்டவைகள் முழுமையாக இடம்பெற்றிருக்க வேண்டும். விற்பனை பட்டியலில் விைத வாங்குபவரின் கையொப்பம் கண்டிப்பாக பெறப்பட வேண்டும்.

 விதை இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சீட் ஆப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விதை விற்பனையாளர்களால் விற்பனை செய்யப்படும் அனைத்து விதை குவியல்களுக்கும் பணி விதை மாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே விதை விற்பனை செய்ய வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 40க்கும் மேற்பட்ட விதை விற்பனையாளர்கள், ஊட்டி விதை பரிசோதனை நிலைய அலுவலர் அன்பழகி, விதை ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : testing ,
× RELATED உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்!