×

இரண்டு நாட்களுக்கு பிறகு ஊட்டியில் மீண்டும் மழை

ஊட்டி, செப். 25:  ஊட்டியில் இரு நாட்களுக்கு பிறகு நேற்று பகலில் மீண்டும் கனமழை பெய்தது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக ஊட்டி, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழை காரணமாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். மூன்று நாட்கள் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், அதன் பின் இரு நாட்கள் மழையின்றி இதமான காலநிலை நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மதியம் சுமார் 12 மணியில் இருந்து 2 மணி வரை நல்ல மழை பெய்தது. மழை காரணமாக குளிர் காணப்பட்டது. இதனால் நகரில் நடமாடிய மக்கள் குடைகளை பிடித்து கொண்டும் ஸ்வெட்டர், குல்லா போன்ற போன்ற வெம்மை ஆடைகளை அணிந்தும் நடமாடினார்கள்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்