×

வேளாண் மசோதாக்களை கண்டித்து தி.மு.க. கூட்டணி 28ம் தேதி ஆர்ப்பாட்டம்

ஊட்டி, செப்.25:  மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 28ம் தேதி நீலகிரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இச்சட்டத்திற்கு ஆதரவளித்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் நீலகிரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் தலைமை தேர்தல் பணி செயலாளர் ராமச்சந்திரன், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரமணியம், சி.பி.எம். மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாநில குழு உறுப்பினர் பத்ரி, சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் பெள்ளி, பாலகிருஷ்ணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் சகாதேவன், ராஜேந்திர பிரபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அனீபா, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் நாகேந்திரன், ம.ம.க. மாவட்ட செயலாளர் அக்பர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாகீர், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ‘‘நீலகிரி மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசிற்கும், இச்சட்டங்களுக்கு ஆதரவு அ.தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவிக்கபட்டது. இச்சட்டங்களை கண்டித்து வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும், இந்த ஆர்ப்பாட்டங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அந்தந்த பகுதிகளிலுள்ள தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., தி.க., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க., மதசார்பற்ற ஜனதாதளம், மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : DMK ,bills Coalition protests ,
× RELATED நகர திமுக அலுவலகம் திறப்பு