×

மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம்

கோவை, செப். 25:  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா தினசரி மார்க்கெட் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மழை காலத்தில் இக்கல்லூரி மைதானமும் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே வியாபாரிகள் மீண்டும் அண்ணா மார்க்கெட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென்று ஏராளமான வியாபாரிகள் அண்ணா மார்க்கெட் உள்ளே  நுழைந்தனர். பின்னர் அவர்கள் மார்க்கெட் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள், சாய்பாபா காலனி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Merchants ,
× RELATED கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள்...