×

மாநகராட்சி பகுதிகளில் 3.50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு, செப்.25:  ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 3.50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக கமிஷனர் இளங்கோவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளிலும் கொரோனா தொற்றை கண்டறிய 10 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, குடிசை பகுதி, நோய் பாதிப்பு உள்ள இடங்களில் 5 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில் சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இம்முகாம் மூலம் இதுவரை 3.50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் ஸ்கிரீனிங் டெஸ்ட் சென்டரில், 5 வகையான பரிசோதனை செய்யப்பட்டு, நோயின் தன்மை கண்டறியப்பட்டு அதன் வீரியத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தொற்றால் பாதிக்கப்பட்டு வைரசின் தாக்கம் குறைவாக உள்ளவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். வீட்டில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்களுக்கு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

Tags : testing ,Corona ,areas ,Corporation ,
× RELATED கொரோனா பரிசோதனையில் பல்வேறு தனியார்...