×

மனித உயிர்களை துணிச்சலுடன் போராடி மீட்டவருக்கு விருது விண்ணப்பிக்க செப்.10 கடைசி

திண்டுக்கல், ஆக. 22:  திண்டுக்கல் மாவட்டத்தில் மனித உயிர்களை மீட்டதில் துணிச்சலுடன் போராடி வீரத்துடன் செயல் புரிந்தவர்களுக்கு “ஜீவன் ரக்ஷா விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2020ம் ஆண்டிற்கு இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சாரம்- தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் வீரத்துடன், துணிச்சலுடன் போராடி மனித உயிர்களை மீட்டவர்களுக்கு ‘ஜீவன் ரக்ஷா விருது’ என்ற பெயரில் சர்வோதம் ஜீவன் ரக்ஷா விருது, உத்தம் ஜீவன் ரக்ஷா விருது மற்றும் ஜீவன் ரக்ஷா விருது வழங்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் < www.jrp.mha.gov.in > என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2020ம் ஆண்டிற்கான  ஜீவன்  ரக்ஷா விருது விண்ணப்பம் என குறிப்பிட்டு விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் 624004 என்ற முகவரிக்கு 10-09-2020க்குள் 3 பிரதிகளுடன் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு  0451-2461162 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கபீல் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்