×

சின்னாளபட்டியில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்

சின்னாளபட்டி, ஆக. 22: சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வார்டு, வார்டாக கொரோனா தடுப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. நேற்று ஜனதா காலனி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து கபசுர குடிநீர், மருந்துகளை வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை பேரூராட்சி செயல்அலுவலர் கலையரசி தலைமையில் தூய்மை பணி ஆய்வாளர் கணேசன், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரவணன், அகிலன் செய்திருந்தனர்.

Tags : Corona Prevention Medical Camp ,Chinnalapatti ,
× RELATED சின்னாளபட்டி கோயில்களில் துர்க்கை, நான்முக முருகனுக்கு சிறப்பு வழிபாடு