×

செல்லமுத்து வீதியில் கழிவுநீர் நிரம்பி வழிவதால் சுகாதார கேடு

உடுமலை, ஆக.21:  உடுமலை செல்லமுத்து வீதியில் சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். உடுமலை நகராட்சி 25, 26வது வார்டில் உள்ள செல்லமுத்து வீதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கட்டிட தொழிலாளர்கள், பெயிண்டர், தள்ளுவண்டியில் விற்பனை செய்வோர் என கூலி தொழிலாளர் குடும்பத்தினரே இங்கு அதிகம் வசிக்கின்றனர். இங்கு கடந்த 3 நாட்களாக, பாதாள சாக்கடை குழியில், கழிவுநீர் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. சாலை முழுவதும் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த வீதியில் அடிக்கடி சாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால், வீட்டில் சமைக்க முடியவில்லை. தூங்கவும் முடியவில்லை. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரகேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பள்ளிகள் இல்லாததால் குழந்தைகள் வீட்டில்தான் உள்ளனர். அவர்கள் வீதியில் நடக்க முடியவில்லை. கடந்த 3 நாட்களாக கழிவுநீர் செல்வதால் புழுக்கள் நெளிகின்றன. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தாலும் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். மாதந்தோறும் பாதாள சாக்கடைக்கு வரி கட்டுகிறோம். எனவே, சாக்கடை குழியை சீரமைத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Tags : Sellamuthu Road ,
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு