சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்கள்: வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சி, ஆக. 22:   பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் குறுகலான பகுதியை அகலப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.    இதில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலையில் ஒன்றான மீன்கரை ரோட்டில்  அகலப்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த ரோட்டில் சுமார் ஒரு அடியளவுக்கு குழிதோண்டப்பட்டு, 5 அடிக்கு சாலை அகலப்படுத்தும் பணி நடந்தது. இந்நிலையில் குழி தோண்டப்பட்ட பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்காமல் உள்ளனர். மேலும் சாலை அகலப்படுத்துவதற்காக ஜல்லி கற்கல் கொட்டி பரப்பி விட்டு உள்ளனர். ஆனால் அப்பகுதியில்  ஜல்லிகள் சிதறி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

 எனவே, மீன்கரை ரோட்டில் ஜல்லி பரப்பி போடப்பட்ட இடத்தில் தார்ரோடு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: