×

தேவர்சோலை பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி,ஆக.22: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் நுழைவு வரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.  தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கற்காபாளி பழங்குடியினர் காலனியில் ரூ.17 லட்சம் மதிப்பில் 408 மீட்டர் சாலை அமைக்கப்பட்டுள்ளது. குற்றிமூச்சி முதல் கவுண்டன் கொல்லி பழங்குடியினர் காலனி பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 1090 மீட்டர் தார் சாலை பணியினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

மேலும், தேவர்சோலை பேரூராட்சிக்குட்ட தைதமட்டத்தில் ரூ.11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றிமூச்சி பகுதியில் உள்ள மாசுபடிந்துள்ள திறந்த வெளி கிணற்றினை பார்வையிட்டார். உடனடியாக அந்த கிணற்று நீரை அப்புறப்படுத்திவிட்டு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், கூடலூர் நகராட்சி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.  இந்தஆய்வின் போது கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் வேணு, களஆய்வாளர் சேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Collector ,municipality ,
× RELATED செந்துறை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு