தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நினைவு கல்வெட்டு

பொள்ளாச்சி, ஆக. 22: கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் நினைவு கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று நிகழ்ச்சி, பொள்ளாச்சி பல்லடம் ரோடு டி.கோட்டாம்பட்டியில் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பழனிகுமார், சக்திபால் ெசந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.ஆழகிரி கலந்துகொண்டு, கட்சிக்கொடி மற்றும் கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில், செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம் மற்றும் இருகூர் சுப்பிரமணியம், ராஜமணி, ஜோதிமணி, கணேசன், காமராஜ், லியாகத்அலி, அன்சர், பஞ்சலிங்கம், தென்னரசு, மோகன்ராஜ், தர், அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>