குளங்களில் சிலைகள் கரைக்க ஏற்பாடு

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது.  இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவுரம் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலை வைக்கவோ, ஊர்வலம் செல்லவோ அனுமதியில்லை என தீர்ப்பளித்தது. மேலும், வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கோவை முத்தண்ணன் குளம், குறிச்சி குளம் போன்ற இடங்களில் விநாயகர் சிலைகளை  பொதுமக்கள் கரைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரைகளில் தடுப்புகள் போட்டு, மின் விளக்குகள் அமைக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: