தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

ஈரோடு, ஆக.22: ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  ஈரோடு மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் சேர்ந்திடவும், கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining  என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் நேரில் ஈரோடு மற்றும் கோபி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், வயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல் வெட் பிராசசிங் டெக்னீசியன் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>