வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

அந்தியூர், ஆக.22: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் தேவர்மலை மாமரத்து பள்ளம் உள்ளது. இப்பகுதியில், மான்கள், முயல்கள், உடும்புகள் அதிகமாக உள்ளது.  இங்கு வனவிலங்குகளை கணக்கெடுக்க வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பர்கூர் வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருத்தி இருந்தனர். இதில், பதிவான காட்சிகளை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 3 பேர் உடும்பு மற்றும் சருகு மான்களை, வேட்டை நாய்களை ஏவி வேட்டையாடி சமைத்து உண்ணும் காட்சி பதிவாகியிருந்தது.  கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில், தேவர் மலையை சேர்ந்த மாதேஷ் (30), மாதேவன்(30), சின்னப்பையன் (25) ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது. இவர்களில் மாதேஷ், மாதேவன் இருவரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து இரும்பு கன்னிகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான தேவர்மலை பகுதியை சேர்ந்த சின்னப்பையனை பர்கூர் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>