×

27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்

காஞ்சிபுரம், மார்ச் 20: 27 நட்சத்திர திருக்கோயிலுக்கு ருத்ராட்ச சிவலிங்கம் காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார். காஞ்சிபுரம் சங்கர மடம் பீடாதிபதி விஜேந்திரர் தனது திருநட்சத்திர தினமான நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் ருத்ராட்சங்களை கொண்டு அமைக்கப்பட்ட 2 அடி உயரம் கொண்ட ருத்ராட்ச சிவலிங்கமும், 4 சதுர அடி கொண்ட ருத்ராட்ச மண்டபமும் காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலை,  உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள  27 நட்சத்திர அதிதேவதை கொண்ட திருக்கோயிலுக்கு வழங்கினார். அதனை நட்சத்திர திருக்கோயில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து விஜயேந்திரர் திருக்கோயில் தல வரலாறு நூல் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

Tags : Rudraksha Shivalingam ,Kanchi Sankaracharya ,
× RELATED வீட்டில் இருந்தே சுவாமி தரிசனத்தை...