×

பட்டாபிராம் அருகே ராமாபுரத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 சவரன் பறிப்பு

ஆவடி, மார்ச் 20: வண்டலூர்-நெமிலிச்சேரி 400 அடி வெளிவட்ட சாலை, பட்டாபிராம் அருகே ராமாபுரத்தில் கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள் 6 சவரன் நகையை பறித்தனர். இதில், தம்பதி இருவரும் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை, ஜாபர்கான்பேட்டை பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (63). இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபாவதி (57). மதிவாணனின் அம்மா சின்னாம்மா திருநின்றவூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

நேற்று காலை மதிவாணன் தனது மனைவி பிரபாவதியுடன் பைக்கில் அம்மாவை பார்க்க திருநின்றவூர் புறப்பட்டார். பட்டாபிராம் அருகே ராமாபுரம் பகுதியில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த இருவரில் ஒருவர் பிரபாவதி கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்க செயினை பறித்து உள்ளனர். இதனால் தம்பதி பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்து லேசான காயம் அடைந்தனர். இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் தங்க செயினுடன் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் பிரபாவதி புகார் செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் பட்டாபிராமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ramapuram ,Buttapram ,
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை