×

சென்னை புறநகர் பகுதியில் குற்றங்களில் ஈடுபட்ட 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை, மார்ச் 20: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது ெசய்தனர். சென்னையில் தொடர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கொளத்தூர் 2வது தெருவை சேர்ந்த அரிஹரன் (26), கொலை, அடிதடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய கிழக்கு தாம்பரம் இரும்புலியூரை சேர்ந்த ரவுடி விவேக்ராஜ் (25), கொலை உள்ளிட்ட 8 வழக்கில் தொடர்புடைய ரவுடி ராகுல் (25), பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகளில் தொடர்படைய ரவுடி உதயகுமார் (25) மற்றும் கொளத்தூர் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்த பழனி (27), மாதவரம் பாரதியார் தெருவை சேர்ந்த விவேக் (எ) லியோ விவேக் (30), கொளத்தூர் வரலட்சுமி நகரை சேர்ந்த வினோத் (27), பட்டாபிராம் தண்டுரை பகுதியை சேர்ந்த உதயகுமார் (26), புளியந்தோப்பு ராஜா கார்டன் 1வது தெருவை சேர்ந்த அந்தோணி குமார் (36) ஆகிய 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,crimes ,suburb ,Chennai ,
× RELATED 2019ல் சைபர் குற்றங்களால் ரூ.1.25 லட்சம்...