×

ரஷ்யாவிடம் பிரிந்த கிர்கிஸ்தானில் இருந்து வந்த 13 பேருக்கு கொரோனா சோதனை: திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளுர், மார்ச் 20: ரஷ்யா நாட்டில் இருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு வந்திறங்கிய 13 இஸ்லாமியர்களுக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என மருத்துவக் குழுவினர் சோதனை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகத்திற்கும், இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ரஷ்யா நாட்டிலிருந்து பிரிந்த ‘’கிர்கிஸ்தான்’ என்ற நகரத்தில் இருந்து, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய 13 இஸ்லாமிய நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டனர். அவர்களை மடக்கி விசாரணை செய்ததில், அவர்கள் கிர்கிஸ்தான் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து, அங்கிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் சென்று, அங்கிருந்து திருவள்ளூர் வந்ததும்,  இங்கு முஸ்ஸீம் ஜமாத்தை சுற்றி பார்க்க வந்ததாகவும் கூறினர். இதையடுத்து அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் பாதிப்பு இல்லாததால் அனைவரையும் ஜமாஅத் நிர்வாகியிடம்  ஒப்படைத்தனர்.
இதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kyrgyzstan ,Russia ,
× RELATED ரஷ்யாவை புரட்டியெடுத்த கனமழை…அணை...