×

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை

சென்னை, மார்ச் 20: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலும் நேற்று முதல் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் கண்டறியும் தெர்மல் ஸ்கிரீனிங் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் மருத்துவ பரிசோதனை தொடங்கியது. ஹாங்காங், சீனா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து சென்னை வரும் பயணிகளுக்கு மட்டும் நடந்த மருத்துவ பரிசாதனை, பின்னர் விரிவுபடுத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் 24 மணி நேரம் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.

ஆனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை. அங்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சுகாதார துறைக்கு கோரிக்கைகள் விடப்பட்டன.
இந்நிலையில், நேற்றில் இருந்து உள்நாட்டு முனைய பயணிகள் வருகை பகுதியில் மருத்துவ பரிசோதனை தொடங்கியது. அதற்காக உள்நாட்டு முனைய வருகை பகுதியில் 3 சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெர்மல் ஸ்கீரினிங் கருவிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு கவுன்டரிலும் ஒரு மருத்துவர், ஒரு உதவியாளர், 2 செவிலியர்கள் வீதம் 4 பேர் இருப்பார்கள். 3 கவுன்டர்களிலும் 12 பேர், பொதுவாக ஒரு தலைமை மருத்துவரும் இருப்பார்.

தற்போது சர்வதேச, உள்நாட்டு முனையத்தில் தெர்மல் ஸ்கீரினிங் மருத்துவ பரிசோதனை கவுன்டர்கள் அமைக்கப்பட்டு விட்டதால், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்கள் இனிமேல் விமான நிலையத்தில் இருந்து சுலபமாக வெளியே சென்றுவிட முடியாது. அதே நேரத்தில், சென்னை பழைய விமான நிலையத்தில் தனி விமானங்கள், சரக்கு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. அதில் வருபவர்கள் பழைய விமான நிலையம், 5வது, 6வது கேட் வழியாக செல்கின்றனர். எனவே அங்கும் தெர்மல் ஸ்கிரீனிங் கவுன்டர் அமைத்தால் நல்லது என்று பொதுமக்கள் தரப்பில் கூறுகின்றனர்.

Tags : Coronation test ,airport ,terminal ,Chennai ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில்...