×

செயின் பறித்தபோது மொபட்டிலிருந்து தவறி விழுந்து தம்பதி படுகாயம்

பட்டாபிராம், மார்ச் 20: சென்னை ஜாபர்கான்பேட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர்  மதிவாணன் (63). இவரது மனைவி பிரபாவதி (57). மதிவாணனின் தாய் திருநின்றவூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை மதிவாணன் தனது மனைவி பிரபாவதியுடன் மொபட்டில் அம்மாவை பார்க்க திருநின்றவூருக்கு புறப்பட்டார். இவர்கள் வண்டலூர்- நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையில் பட்டாபிராம் அருகே ராமாபுரம் பகுதியில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த இருவர், பிரபாவதி கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

இதனால், தம்பதி மொபட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதை பொருட்படுத்தாத கொள்ளையர்கள், செயினுடன் பைக்கில் தப்பினர். அவ்வழியே வந்த பொதுமக்கள், தம்பதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பட்டாபிராம் காவல் நிலையத்தில் பிரபாவதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Chain ,
× RELATED நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு