×

கழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி

கழுகுமலை, மார்ச் 20: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் கோயில் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், கோயில்களிலும்  சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தென்தமிழகத்தின் எல்லோரா என்றும், தென் பழநி என்றும் அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்களை சுகாதாரத் துறையினர் இருமல், சளி, உடல்சோர்வு போன்றவை இருக்கிறதா எனக் கேட்பதோடு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகே கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். அத்துடன் திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்து வளாகப் பகுதிகளிலும் கழுகுமலை பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பான்கள் தெளிக்கப்பட்டு, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Pilgrims ,examination ,Kalugumalai ,
× RELATED இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு,...