குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

தூத்துக்குடி, மார்ச் 20:  தூத்துக்குடி மாவட்டம், புத்தன்தருவையை சேர்ந்த ஜெயசிங் மகன் பிரபாகரன் (43).  ரவுடியான இவர் மீது கேரள மாநிலம் நெகமம் போலீசில் கொலை வழக்கு, நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.  மேலும் இவர் தூத்துக்குடி மாவட்ட ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய எஸ்பி அருண் பாலகோபாலன், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கலெக்டரிடம் பரிந்துரைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பிறப்பித்த உத்தரவை அடுத்து பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைதுசெய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: