வல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

செய்துங்கநல்லூர்,  மார்ச் 20: செய்துங்கநல்லூர் அருகே வல்லநாடு அகரம் கிராமத்தில் மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் நலன்கருதி காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் தலைமை வகித்தார்,சித்த  மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர்  நாயனார் வரவேற்றார். சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் பேசினார். இதில்  பணித்தள பொறுப்பாளர் இளவரசி, சுப்புலட்சுமி, தேசிய ஊரக வேலை உறுதித்  திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதுநிலை  சிகிச்சை  மேற்பார்வையாளர் அப்துல்ரஹீம் ஹீரா  நன்றி கூறினார். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் மருத்துவர்கள் மற்றும் சித்த  மருத்துவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: