சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

சாத்தான்குளம், மார்ச் 20: சாத்தான்குளம் ஹென்றி பள்ளி மாணவர்கள் 27 பேர், இளம்விஞ்ஞானிகள் தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர். சாத்தான்குளம் ஹென்றி  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து  27 மாணவ, மாணவிகள் தேசிய இளம்விஞ்ஞானி  தேர்வு எழுதினர். இதில் பள்ளி மாணவிகள் கலைமதி, ஜெரிட்டா எஸ்தர், ஆதிசங்கர் ஆதிமௌனரிஷி, அக்சய்வர்ஷினி, ஷர்மிளா, புஷ்பவள்ளி வர்த்தினி, கணேஷ், சுடலை, பூபாலா, சிவ வெங்கடேஷ், அனிஷா ஒய்ஸ்லின், சதீஸ்ராஜா, சபரிஷ், ஹரி அபிஷேக்முத்து, அந்தோனி ஜோரன்ஸ், வினிஸ், கிறிஸ்டா, நஸ்லீரின் பாத்திமா, முத்துநரேஷ், ஜெனுஷா மேரி, ரவின், பிரதிமா, பிரித்தி சாலினி ஆகிய 27 மாணவ, மாணவிகள் சிறந்த இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கோவையில் நடந்தது. தேர்வுபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இதே போல் இப்பள்ளிக்கு சிறந்த முதல்வருக்கான விருதும்  வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற  மாணவர்களை பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், இயக்குநர் டினோ மெலினாராஜாத்தி, பள்ளி நிர்வாக அலுவலர் சாந்தி, துணை முதல்வர் சந்தனக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: