×

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை

நாசரேத், மார்ச் 20:நாசரேத்  மர்காஷிஸ் கல்லூரியில் டிலைட் மாணவர் உதவித் திட்டம் சார்பில் ஏழை, எளிய  மாணவ- மாணவிகளுக்கு தேர்வுக் கட்டணம் வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த கல்லூரி  முதல்வர்அருள்ராஜ் பொன்னுதுரை சிறப்புரையாற்றினார். பாடகர்  குழுவினர் துதிப்பாடல்கள் பாடினர்.  விலங்கியல் துறைத் தலைவர் பிராங்மெரின்  ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி துணை முதல்வர பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்றார். சிறப்பு  விருந்தினராகப் பங்கேற்ற ஐடியல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஞானராஜ் கோயில்பிள்ளை, துறைக்கு 3 மாணவர்கள் வீதம் 40  மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம்  செலுத்துவதற்கு தலா ரூ. ஆயிரம் வழங்கினார். ஜீவிஎஸ்தர், நிதிக்காப்பாளர்  குளோரியம் அருள்ராஜ் வாழ்த்திப் பேசினர்.  நிகழ்ச்சிகளை ஆங்கிலத்துறை பேராசிரியை பியூலாஹேமலதா தொகுத்து வழங்கினார். துறைத்  தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.  தமிழ்த்துறைத் தலைவர்அந்தோணி செல்வகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே ராஜன், முதல்வர்அருள்ராஜ் பொன்னுதுரை, மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Nazareth Markashis College ,
× RELATED 1000 உதவித்தொகை பெறுவதற்கு நடைபாதை வியாபாரிகள் ஆவணம் சமர்ப்பிக்கலாம்