×

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்

நாங்குநேரி, மார்ச் 20:  பைக் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கல்லத்தியை சேர்ந்த அம்மாசி மகன் மாணிக்கராஜ்(22). தனியார் நிறுவனத்தில் வே லை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நாங்குநேரி அருகே தென்னிமலை சுடலைகோவில் வளைவில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக்குடன் நேருக்குநேர் மோதியது. இதில் மாணிக்கராஜிக்கு வலது கால் தொடையில் எலும்புமுறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் நெல் லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில் விப த்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டிவந்த நாங்குநேரியை அடுத்த சிங்கநேரியை சேர்ந்த முப்பிடாதி மகன் முகேஸ் முருகன்(30) என்பவர் மீது சப்- இன்ஸ்பெக்டர் சஜீவ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : corner ,
× RELATED திருவெறும்பூர் அருகே ஓய்வு பெல் ஊழியர் பைக் மோதி பலி