×

நெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது

நெல்லை, மார்ச் 20:  நெல்லை டவுனை சேர்ந்த முருகன் மகன் சிவசுப்பிரமணியன் என்ற கோட்டிமணி (27). இவர் ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் பக்கத்து தெருவைச் சேர்ந்த இளம்பெண் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சிவசுப்பிரமணியன் டவுன் பகுதியில் ஆட்டோ மற்றும் பைக்கில் சென்று, வரும் போது அவ்வழியாக வரும் ஆசிரியையை வழிமறித்து தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் காலையில் ஆசிரியை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த சிவசுப்பிரமணியன், ஆசிரியையை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டினார். இதுகுறித்து டவுன் போலீசில் ஆசிரியை புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிவசுப்பிரமணியனை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

Tags : Auto driver ,teacher ,
× RELATED கமிஷன் மற்றும் வருமானம் நடிகை...