நெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று குடிநீர் விநியோகம் 'கட்'

நெல்லை, மார்ச் 20: நெல்லை மாநகராட்சி 8, 9ம் வார்டுகளில் இன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் சுத்தமல்லி புதிய தலைமை நீரேற்ற நிலையத்தில் இருந்து வெளியேறும் பிரதான குடிநீர் குழாயில் தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோயில் அருகில் உள்ள மதுரை ரோட்டில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான பராமரிப்பு பணி நடந்து வருவதால் 8வது வார்டு கொக்கிரகுளம், குறுந்துடையார்புரம், 9வது வார்டு வண்ணார்பேட்டை இளங்கோ நகர் பகுதிகளுக்கு இன்று (20ம் தேதி) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: