×

கொரோனா வைரஸ் எதிரொலி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்தது

நெல்லை, மார்ச் 21: கொரோனா வைரஸ் எதிரொலியாக நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை பலமடங்கு குறைந்துள்ளது. வருபவர்கள் அனைவரும் சோப்பு பயன்படுத்தி கை கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் முன்எச்சரிக்கை அறிவிப்புகளால் நெல்லையின் வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை கடந்த ஒரு வாரமாக குறைந்துள்ளது. இங்கு பக்தர்கள் நுழையும் பகுதியில் சோப்பு பயன்படுத்தி கைகழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த கோயிலுக்கு தினமும் சராசரியாக ஆயிரம் முதல் ஆயிரத்து 200 பக்தர்கள் வருவது வழக்கம். விழாக்காலங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த ஒருவாரமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 பேர் என்ற அளவிலேயே வருகின்றனர். வழக்கமான கால பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் மிக குறைவாகவே உள்ளது. இதனிடையே, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் வரும் 31ம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Devotees ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி