×

இளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு

நெல்லை, மார்ச் 20: வைகுண்டம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.  நெல்லை மாவட்டம், பணகுடியை சேர்ந்த ஷேய்க் மதார்  மகன் ஷேக் அஹமத் அரபாத் (27). வைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில்  இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது அங்கு வந்த வைகுண்டத்தை சேர்ந்த பெருமாள்  மகன் தங்கவேல் (30) என்பவர்  தரக்குறைவாகப் பேசியதோடு கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் இடது கை தோளில் வெட்டுப்பட்ட ஷேக் அஹமத் படுகாயம் அடைந்தார். இருப்பினும் தங்கவேல், அங்கிருந்த  நாற்காலி , மேசை ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினார்.

இதையடுத்து மீட்கப்பட்ட ஷேக் அஹமத் அரபாத் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வைகுண்டம் எஸ்ஐ சந்திரகுமார், தப்பியோடிய தங்கவேலை போலீசார் தேடிவருகின்றனர். இதையடுத்து வைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ் குமார் பேரூராட்சி அலுவலக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதே போல்  பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பேரூராட்சி அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

Tags : junior assistant ,
× RELATED வேலூர் அருகே போலீஸ்காரர் மீது...