×

கிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா?

திருவாரூர் மார்ச் 20: கொரனோ வைரஸ் நோய் என்பது முதன்முதலாக சீனாவின் வுகான் நகரத்தில் ஏற்ப்பட்ட நிலையில் இந்த நோயானது தற்போது இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோயானது சுமார் 130 பேர்களை தாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து கர்நாடகாவில் ஒருவர் மற்றும் மகாராஷ்டிராவில் 2 பேர் என மொத்தம் 3 பேர்கள் இறந்துள்ளனர். மேலும் கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணம் மற்றும் கோயில் விழாக்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பக்தர்கள் அதிகமாக கூடும் சபரிமலை ஐய்யப்பன் கோயில், திருப்பதி ஏழுமலையான், தஞ்சை பெரிய கோயில் உட்பட பல்வேறு கோயிலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நோயின் தாக்கம் பல்வேறு மாநிலங்களிலும் ஏற்ப்பட்டுள்ளதால் மத்திய அரசு இந்த நோயினை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் காரணமாக தமிழகத்திலும் இந்த நோயின் தாக்கம் ஏற்ப்பட்டுள்ளதால் இதனை கட்டுபடுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லு£ரிகளுக்கு வரும் 31ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் போன்றவற்றினையும் வரும் 31ந் தேதி வரையில் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஐடி போன்ற தனியார் துறை நிறுவனங்கள தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தவாரே பணி செய்யுமாறு தெரிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் உள்ள ஊழியர்கள் பணிக்கு வராமல் வீட்டிலே இருக்குமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கொரானோ வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு முக கவசம் அணிவது மற்றும் கிருமிநாசினி திரவம் கொண்டு கை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இந்த முக கவசம் மற்றும் கிருமிநாசினிகளுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திடீர் தட்டுபாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மருந்து நிறுவனங்கள் விலையினை தாறுமாறாக விற்பனை செய்து வருகின்றன. இதனை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த முக கவசம் மற்றும் கை கழுவும் திரவம் இருப்பு மற்றும் விற்பனை குறித்து மருந்து நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகளிடம் ஆய்வு செய்திட கலெக்டர் தலைமையில் மருத்துவ துறை மற்றும் வருவாய் துறை உயர் அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் நேற்று தெற்கு வீதி உட்பட பல்வேறு இடங்களில் மருந்து விற்பனை கடைகளில் ஆர்.டி.ஓ ஜெயபிரித்தா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த முக கவசம் மற்றும் கை கழுவும் திரவம் போன்றவற்றினை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மற்றும் பதுக்குபவர்கள் மீது 1955 அத்யாவசிய சட்டத்தின் படி கடும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : wash ,
× RELATED மணத்தக்காளி கீரை துவையல்