×

ஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா?

முத்துப்பேட்டை, மார்ச் 20: முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பள்ளிவாசலை ஒட்டி செல்லும் சாலையில் கழிவுநீர் வடிகால் செல்கிறது. இந்த வடிகால் மஜிதியா தெரு வழியாக சென்று பேட்டை சாலையில் செல்லும் வடிகாலில் கலக்கிறது. இந்நிலையில் இந்த வடிகாலில் பல இடங்களில் தடுப்பு சுவர்கள் பெயர்ந்து விழுந்து சேதமாகியுள்ளன. இதில் குறிப்பாக முகைதீன் பள்ளி வாசலை ஒட்டி செல்லும் வடிகால் இருபக்கவாட்டில் உள்ள தடுப்புசுவர் இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி விடுகிறது. இதனை பேரூராட்சி பணியாளர்கள் அடிக்கடி சுத்தம் செய்தால்தான் கழிவுநீர் வடிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தநிலையில் சேதமான இந்த வடிகாலால் அப்பகுதியில் செல்லும் வாகனங்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதில் எதிர்புறம் ஒரு வாகனம் வரும்போது மற்றொரு வாகனத்திற்கு இடமிட்டு செல்லும்போது அந்த வாகனம் இந்த சேதமான கழிவுநீர் வடிகாலில் விழுந்து பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த வழியாக தான் பல்வேறு பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்கிறது. இதனால் விபத்துக்களில் பள்ளி வாகனங்கள் சிக்கி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் இந்த பகுதியில் உள்ள சேதமான இந்த கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி மக்களும் பள்ளி வாசல் நிர்வாகமும் பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறனர் ஆனாலும் அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி தற்பொழுது புதியதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த சேதமான கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதி மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள இந்த சேதமான கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால் சீரமைக்க எந்த அதிகாரிகளும் முன்வர வில்லை. தற்பொழுது வந்துள்ள அலுவலர் இதனை உடனே நேரில் ஆய்வு செய்து சீரமைத்து தரவேண்டும் என்றார்.

Tags : Union ,committee chairman ,
× RELATED மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியின்...