×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்

முத்துப்பேட்டை, மார்ச் 20:முத்துப்பேட்டை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரபாபு தலைமையில் காவலர்கள் வீரசேகர், சுரேஷ் ஆகியோர் கீழநம்மங்குறிச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணல் ஏற்றி வந்த மின் லாரி ஒன்று போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடினார். இதனையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய டிரைவரை தேடிவருவதுடன் வாகனம் யாருடையது? என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கோரையாற்றில் மண் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு மணல் ஏற்றிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து தப்பியவர்களை தேடிவருகின்றனர்.

Tags : Larry ,sand theft ,
× RELATED டிராக்டர் மோதி பெண் பலி