மளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை

கும்பகோணம், மார்ச் 20: கும்பகோணம் அருகே மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே சுவாமிமலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் விமல் (35). இவர் மூப்பகோயில் வழிநடப்பு பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கடை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே இருந்த கல்லாவும் உடைக்கப்படடு ரூ.25 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: