கொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

க்ஷதஞ்சை, மார்ச் 20: கொரோனா வைரஸ் காரணமாக தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் மாதத்துக்கான மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மற்றும் உலக சுகாதார இயக்கம் கொரோனா வைரஸ் நோய் தொற்றை பேரழிவாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: