×

ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு

திருக்காட்டுப்பள்ளி, மார்ச் 20: பூதலூரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பூதலூர் என்வி நகர் புதுத்தெரு பிச்சையா மகன் சுதாகர் (எ) தமிழ்ச்செல்வன்(37). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பூதலூர் அய்யனாபுரம் ரோடு பாஸ்கர் மகன் ராஜாவின் பாட்டி இறந்த துக்க வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த ராபர்ட், மணிமாறன், தங்கராசு, மணிகண்டன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக சுதாகரை தாக்கினர். இதனை விலக்கி விட சென்ற ராஜாவையும் திட்டி கட்டை, கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சுதாகர், ராஜா ஆகியோர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பூதலூர் காவல் நிலையத்தில் ராஜா (25) நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிந்து மணிமாறனை கைது செய்தார். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகிறார்.

Tags : auto driver ,
× RELATED முதியவரிடம் வழிப்பறி