×

விவசாயி தற்கொலை

கும்பகோணம், மார்ச் 20: வயிற்றுவலியால் விஷம் குடித்த விவசாய தொழிலாளி, சிகிச்சை பலனின்றி இறந்தார். கும்பகோணம் அடுத்த சுந்தரபெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (45). விவசாய கூலியான இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். சசிகுமார் நீண்ட நாட்களாக மது குடித்து வந்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சசிகுமார் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED பொள்ளாச்சியில் மாயமான விவசாயி பி.ஏ.பி வாய்க்காலில் பிணமாக மீட்பு