×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்

கும்பகோணம், மார்ச் 20: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கும்பகோணம் பகுதி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மூன்று சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் இந்த சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகில் 27 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெற்றது. இந்நிலையில் ஷாஹீன் பாக் போராட்டக்குழு சார்பில் வரும் 31ம் தேதி வரை தினம் ஒரு போராட்டம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் கும்பகோணம் அடுத்த மேலக்காவிரி, கருப்பூர், சுவாமிமலை, சோழபுரம், திருநாகேஸ்வரம் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள இஸ்லாமியர்கள், தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், இஸ்லாமியர்கள் ஊர்வலமாக கருப்பு கொடியேந்தி, அங்குள்ள தெருக்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கமிட்டனர்.

எஸ்டிபிஐ முன்னாள் மாவட்ட தலைவர் பைசல் முகம்மது தலைமை வகித்தார். ஐஎன்டிஜே மாவட்ட தலைவர் ஜாபர், ஏகாத்துவ ஜமாத் மாவட்ட தலைவர் அர்ஸ் முகம்மது, எஸ்டிபிஐ மாவட்ட பொது செயலாளர் இப்ராஹீம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் வரும் 31ம் தேதி வரை எந்த விதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தகூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் வரும் 31ம் தேதி வரை தினம் ஒரு போராட்டம் என நூதன முறையில் நடத்தவுள்ளோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Muslims ,building houses ,
× RELATED நியூசிலாந்து மசூதியில் 51 பேரை...