×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்

பெரம்பலூர்,மார்ச்20: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க- கைகழுவும் விழிப் புணர்வு கலெக்டர் அலுவலகத்திலிருந்தே தொடங்கி வைக்கப்பட்டது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு தீவிர நடவ டிக்கைகளை மேற்கொண் டு வருகிறது. இதனையொ ட்டி தமிழகத்திற்குப் பல்வே று விமான நிலையங்கள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ள நபர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திடவும், அ வர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டால் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகளில் வெண்டிலட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமை க்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டுகளில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கவும், பொ துமக்களுக்கு கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப் பதற்கான முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளை மே ற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தப்ப ட்டுள்ளன.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத் தில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் அரசு அலுவலர்கள் அனைவரும் அலு வலகத்திற்கு செல்லும் முன்பாக தங்கள் கைகளைக் கிருமி நாசினிக் கொண்டு கழுவி சுத்தப்படுத்தி செல்லவும் மீண்டும் பணிகளை முடித்து வெளியே திரும்பும் போது கைகளை சுத்தப்படு த்திக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள து. இதனையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய் வநாயகி ஆகியோர் முன் னிலையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா கலந்துகொண்டு கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவி சுத்தப்படுத்தி அரசு அலுவலர்கள் அனைவரும் அதை பின்பற்ற வலியுறுத்தி பேசியதாவது:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவைரஸ் தொற் று பரவலைத் தடுக்க மத்தி ய, மாநில அரசுகள் பிறப்பி த்துள்ள உத்தரவை அரசுத் துறைஅலுவலர்கள் அனை வரும் தவறாமல் பின்பற்றி அலுவலகத்திற்குதங்களை காணவரும் பொதுமக்க ளையும் மனு தாரர்களை யும் விழிப்புணர்வு ஏற்படு த்தச் செய்யவேண்டும். கு றிப்பாக தும்மும்போதும் இருமும்போதும் கைகளில் துணிகளை வைத்துக் கொ ண்டு வாயைமூடிதும்மவும் சோப்பு, டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொ ண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வும் அறிவுறுத்தி விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண் டும். தங்கள் பகுதிகளில் யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் தென்பட்டால் அவர்கள் உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவ மனைகளிலும் நேரில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறு த்த வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மூன்று தளங்களில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலெக்டர் அலுவ லகத்தின் முன்பு தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக கழுவி சென்றனர். மேலும் நகரா ட்சி துப்புரவு பணியாளர் கள் கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து தளங்களி லும் உள்ளே சென்று ஒவ்வொரு துறை அலுவலக அறைகளிலும் கதவுகளி லும் தரைகளிலும் ஸ்ப்ரேயர் கருவியைக் கொண்டு கிருமி நாசினிகளை தெளி த்து தூய்மைப்படுத்தினர். தொடர்ந்து வரும் 31ம்தேதி வரை இதேபோல் கைகளை அலுவலகம் செல்லும் முன்பாகவும் வெளிவரும் போ தும் சுத்தமாக கழுவிச்செல்ல வசதியாக தகர வாஷ்பேஷன் தண்ணீர் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Office ,Perambalur Collector ,
× RELATED சிவந்திபுரத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி