×

மியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு

பாடாலூர், மார்ச் 20: ஆலத்தூர் தாலுகா கூத்தனூரில் வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீரங்கன் மகன் ராஜ்குமார் (22). இவரது பைக்கை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைத்து இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி பைக்குக்கு தீ வைத்து விட்டனர். இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : museum ,house ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல்12 வரை...