×

ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்

ஜெயங்கொண்டம், மார்ச் 20: ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணிமனை கிளையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன. மேலும் அனைத்து போக்குவரத்து மற்றும் பணிமனை தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. பணியாளர்கள் பணிமனையின் உள்ளே சென்றவுடன் அனைத்து தொழிலாளர்களும் கை கழுவுவதற்கான கிருமி நாசினி நீர் அங்கு வைக்கப்பட்டு அனைவருக்கும் கை கழுவும் முறைகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு பேருந்துகளிலும் கிருமிநாசினி மருந்துகள் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை கிளை மேலாளர் குணசேகரன் வழங்கி துவக்கி வைத்தார். மண்டல மேலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். முக கவசங்களை நகராட்சி ஆணையர் அறச்செல்வி அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ராஜ பிரபு, போர்மேன் பாண்டித்துரை, தொழிற்சங்க நிர்வாகிகள் கருணாநிதி, சோழராஜன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Transport Corporation ,
× RELATED ஆள்குறைப்பை கண்டித்து கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் போராட்டம்